கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மக்காச்சோள பயிர்களுடன் போராட்டம் - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மக்காச்சோள பயிர்களுடன் போராட்டம் - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2020 4:00 AM IST (Updated: 24 Nov 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

இழப்பீடு வழங்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மக்காச்சோள பயிர்களுடன் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோபிநாயக்கன்பட்டி, முருகனேரி, ரெட்டியபட்டி, வையூர், சிலார்பட்டி, சத்திரப்பட்டி, சுப்புலாபுரம், மோதகம் உள்ளிட்ட 12 கிராமங்களில் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 37 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். அதற்கு இன்சூரன்சும் செய்து இருந்தனர்.

ஆனால் மழை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதற்குரிய இழப்பீடு தொகை கேட்டு அவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று மக்காச்சோள பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, எங்களுக்கு கோடி கணக்கில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தொகையை வழங்காமல் விவசாய அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story