உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உடன்குடி,
உடன்குடி பகுதியில் தாங்கைகுளம், தருவைகுளம் என 2 குளங்கள் உள்ளன. இந்த 2 குளங்களுக்கும் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீருக்காக அந்த குளங்கள்ஏங்குகின்றன.
அதே நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக தினமும் கடலுக்கு மழைநீர் வீணாக செல்கிறது. குளங்கள் வறண்டு கிடக்கும் நிலையில் தண்ணீர் கடலுக்கு வீணாக செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
மேலும் சாத்தான்குளம், உடன்குடி வழியாக செல்லும் கருமேனி ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை. தாங்கைகுளம், தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தால் இந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும். இதன்மூலம் ஆற்றில் உள்ள ஏராளமான தடுப்பணைகள் மற்றும் ஊருணிகள் நிரம்பும். இதனால் அந்த பகுதியில் உள்ளவிவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம்பாதுகாக்கப்படும்.
எனவே தாங்கைகுளம், தருவைகுளம் நிரம்பும் வகையில் அணையில் இருந்து கால்வாயில் அதிகளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story