பாளையங்கோட்டை சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பாளையங்கோட்டை சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் சவேரியார் ஆலயம் உள்ளது. மிகப்பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. உளவியல் வல்லுநர் அருள் அடிகளார் மறையுரை ஆற்றினார்.
பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் ராஜேஷ், மிக்கேல் பிரகாசம், லூர்து ராஜ் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலையில் மறையும் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்ப்பவனி
வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஒப்புரவு அருட்சாதனம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன. 2-ந் தே தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடக்கிறது.
மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படுகிறது. அன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சேவியர் ஆலய பங்குத் தந்தைகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story