25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை கர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + No casualties in 25 districts Corona affected 1,870 new people in Karnataka
25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை கர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 74 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,870 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்து 425 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு நகரில் 12 பேர், உத்தரகன்னடாவில் 2 பேர், பாகல்கோட்டை, பல்லாரி, மைசூருவில் தலா ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 18 ஆயிரத்து 232 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 47 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,949 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 40 ஆயிரத்து 99 பேர் குணம் அடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 612 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 418 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று 25 மாவட்டங்களில் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.