விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 548 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 792 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 496 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2,088 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
நேற்று மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,097 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2,088 பேரின் முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
மாவட்ட சுகாதார துறையினர் 8 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் பாதிப்படைந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கவில்லை. வழக்கமாக முழுமையான பட்டியல் வெளியிடுவதை கைவிட்டு விட்ட மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்வதிலும், முடிவுகளை அறிவிப்பதிலும் போதிய அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது.
தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் மாவட்ட சுகாதார துறையினர் அதனை முறையாக பின்பற்றாத நிலை நீடிக்கிறது. மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு விதிமுறைகள் எந்த இடத்திலும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகமும் இதற்கான வழிகாட்டல்களை வழங்காத நிலையே நீடிக்கிறது. மொத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலை உள்ளது.
Related Tags :
Next Story