உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: திருச்செந்தூரில் இன்று ரத்ததானம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கை


உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: திருச்செந்தூரில் இன்று ரத்ததானம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2020 3:40 AM IST (Updated: 26 Nov 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்செந்தூரில் இன்று (வியாழக்கிழமை) ரத்த தானம் நடைபெறுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

உடன்குடி, -

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக நோயுற்ற மக்களின் உயிர் காக்கும் விதமாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 200 இளைஞர்கள் ரத்த தானம் செய்கின்றனர். பார்வையற்றோர், மனநலம் பாதித்தோர், முதியோர் இல்லங்களில் உள்ள மக்களுக்கு மதிய உணவும், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக கைப்பந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் விதமாக 6 இடங்களில் நடக்கிறது.

எனது (அனிதா ராதாகிருஷ்ணன்) தலைமையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், கழக முன்னணியினர், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம், காலை 9 மணிக்கு உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளையில் கைப்பந்து போட்டி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நாசரேத் கனோன் தாமஸ் சித்தர் மனநலப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

வருகிற 29-ந்தேதி உடன்குடி மெய்யூரில் காலை 9 மணிக்கு கிரிக்கெட் போட்டி, பகல் 12 மணிக்கு அடைக்கலாபுரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி காலை 9 மணிக்கு காயல்பட்டினம், திருச்செந்தூரில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம் தெற்கு ஒன்றிய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு செய்துங்கநல்லூரில் மதிய உணவு வழங்குதல், காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு, கிழக்கு ஒன்றிய பகுதியில் கொடியேற்றுதல், நலத்திட்டம் வழங்குதல், பகல் 12 மணிக்கு கூட்டாம்புளி அன்பு இல்லத்தில் மதிய உணவு வழங்குதல், பகல் 12 மணிக்கு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய பகுதியில் கொடியேற்றி 500 தென்னங்கன்றுகள் வழங்குதலும் நடக்கிறது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் மதிய உணவு வழங்குதல், கே.கைலாசபுரம் ரோஸ் மேரி கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்குதல், கருங்குளம் வடக்கு ஒன்றியத்தில் கொடியேற்றுதல், வசவப்பபுரம் முதியோர் கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்குதல், தூத்துக்குடி மத்திய ஒன்றியத்தில் புதுக்கோட்டையில் கொடியேற்றுதல், நலத்திட்டம் வழங்குதல், அன்னை இந்திராநகர் லூசியா பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்குதல், தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தில் ஆரோக்கியபுரத்தில் காலை 10 மணியளவில் கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

28, 29-ந்தேதிகளில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் தருவைகுளம், தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி ஆகிய இடங்களில காலை 9 மணிக்கு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 29-ந்தேதி காலை 10 மணிக்கு வல்லநாடு பகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் நலத்திட்டம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதலும், காலை 10 மணிக்கு ஸ்பிக்நகர் பகுதியில் கொடியேற்றி, நலத்திட்டம் வழங்குதலும், அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி காலை 9 மணிக்கு டி.சவேரியார்புரம் உள்விளையாட்டு அரங்கத்தில் கபடி போட்டியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story