குளித்தலை அருகே, தம்பதியினர் இடையே தகராறு; தீக்குளித்த பெண் சாவு


குளித்தலை அருகே, தம்பதியினர் இடையே தகராறு; தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2020 3:30 AM IST (Updated: 26 Nov 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை காமன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி அம்சவள்ளி (வயது 26). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொத்தனாரான செந்தில் கோயம்புத்தூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

அம்சவள்ளி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கோயம்புத்தூரில் இருந்து தனது மனைவி, மகளை பார்க்க அய்யர்மலைக்கு வந்திருந்த செந்தில் மீண்டும் கோயம்புத்தூருக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடன் கூறியுள்ளார். அதற்கு அம்சவள்ளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் செந்தில் கடைக்கு சென்றுள்ளார். இந்த தகராறில் மனமுடைந்த அம்சவள்ளி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். இதையடுத்து பலத்த தீக்காயமடைந்த அவரை செந்தில் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்சவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் சரோஜா அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story