‘நிவர்’புயல் எதிரொலி: பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது


‘நிவர்’புயல் எதிரொலி: பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 26 Nov 2020 6:15 PM IST (Updated: 26 Nov 2020 6:15 PM IST)
t-max-icont-min-icon

‘நிவர்’புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருப்பூர், 

‘நிவர்’புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் புயலின் பாதிப்பு எச்சரிக்கை இல்லாத போதிலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் நேற்றுமுன்தினம் மதியம் முதல் இயக்கப்படவில்லை.இதனால் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இருப்பினும் தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ் நிலையங்களில் தொலைதூர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை திருப்பூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Next Story