திருமணமாகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
கடலூர் மாவட்டம் பொன்னடம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் தனக்கு இதுநாள் வரை திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்திலும், சரியான வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் வினோத் அடிக்கடி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புலம்பி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதியன்று வினோத் திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கோவிந்தமேடு பகுதிக்கு வேலையின் காரணமாக சென்றார்.
திருமணமாகாத ஏக்கத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்த்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். .அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story