அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்


அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Nov 2020 2:29 PM GMT (Updated: 27 Nov 2020 2:29 PM GMT)

அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் விவசாய அணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

பல்லடம் ஒன்றிய பொதுச்செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பிரகாஷ், சங்கர், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

சாலை மறியல்

தொடர்ந்து ஊர்வலமாக வந்த அவர்கள் தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். 

Next Story