பெண் குழந்தைகளை காப்பாற்ற விழிப்புணர்வு: நடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய 5 வயது சிறுமி


பெண் குழந்தைகளை காப்பாற்ற விழிப்புணர்வு: நடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய 5 வயது சிறுமி
x
தினத்தந்தி 28 Nov 2020 4:45 AM IST (Updated: 28 Nov 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்து உள்ளது.

வசாய், 

மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீஸ்காராக இருந்து வருபவர் நினாட். இவரது மனைவி ஜான்வி. இவர்களது மகள் உர்வி (வயது5). இந்த நிலையில் உர்விக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இந்த பிறந்தநாளை கொண்டாட உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டது. இவள் வழக்கம் போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தைகளை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்தாள்.

இதன்படி நினாட், விரார் அர்னாலா கடலின் நடுப்பகுதியில் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். இதன்படி நினாட் தனது மகள், குடும்பத்தினருடன் அர்னாலா கடற்கரைக்கு வந்தார். அங்கிருந்த படகு மூலம் கரையில் இருந்து 3.6 கி.மீ. தூரம் (2 நாட்டிகல் மைல்) கடலுக்குள் சென்றனர். அவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து இருந்தனர்.

பின்னர் உர்வி மனதைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினாள். தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாள். உர்வி வெட்டிய கேக்கில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம் பெற்று இருந்தன. மனதைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்தநாளை கொண்டாடிய விதம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


Next Story