வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 9.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி,
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1.1.2021 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி-2021 சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி புதுவையில் 725 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்தது. இதேபோல் காரைக்காலில் 163 இடங்களிலும், மாகியில் 31 இடங்களிலும், ஏனாமில் 33 இடங்களிலும் நடந்தது. இந்த முகாமில் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை புதிதாக சேர்த்தல், பெயர், விலாசம் திருத்தம் செய்ய விண்ணப்பித்தனர். இந்த பணிகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தலைமையிலான குழுவினர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதேபோல் வருகிற 12, 13(சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்த புதுச்சேரி தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story