கார்த்திகை தீபத்திருநாளையொட்டி பெங்களூருவில் இருந்து நாகைக்கு விற்பனைக்கு வந்த அகல் விளக்குகள்
கார்த்திகை தீபத்தீருநாளையொட்டி பெங்களூருவில் இருந்து நாகைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அகல்விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
நாகப்பட்டினம்,
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் கார்த்திகையும் ஒன்றாகும். இந்த நாளில் மாலை நேரத்தில் அனைத்து வீடுகளிலும், களிமண், பீங்கான் மற்றும் உலோகத்தினால் ஆன சிறிய அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். இந்த விளக்குகளை வீட்டு வாசல் படி, ஜன்னல்கள், பால்கனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்றி வைப்பார்கள். இதனால் வீடு முழுவதும் ஒளி வெள்ளத்தில் காட்சி அளிக்கும்.
மேலும் வீடுகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள், கோவில்கள் ஆகியவற்றிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். திருக்கார்த்திகை நாளில் இருந்து பெரும்பாலோனோர் கார்த்திகை மாதம் முடியும் வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவார்கள்.
பெங்களூரு அகல் விளக்குகள்
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக நாகை கடைத்தெருவில் பெங்களூருவில் இருந்து அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் லட்சுமி விளக்கு, சங்கு விளக்கு, சிவன் விளக்கு, சக்கர விளக்கு, அணையா விளக்கு, பூ விளக்கு, தட்டை விளக்கு என பல்வேறு வடிவங்களிலும் மண்ணில் செய்யப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து நாகை கடைத்தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக அகல் விளக்குகள் விற்பனை செய்யும் சர்க்கரை அம்மாள் கூறுகையில்:-
பெங்களூருவில் பல வடிவங்களில் செய்யப்பட்ட அகல்விளக்குகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நாங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து நாகை பகுதியில் விற்பனை செய்கிறோம்.
ஊரடங்கு
ஒரு விளக்கு ரூ.5, ரூ 10, ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக 10 வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. கொரோனா ஊரடங்கு, பருவ மழை என பல்வேறு இடர்பாடுகளால் நாகையில் அகல்விளக்கு தயாரிப்பு பணி சுணக்கம் அடைத்துவிட்டது. நாகையில் தயாரிக்கப்படும் மண் விளக்குகள், பழைய வடிவில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் வாங்க விரும்புவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நாகை கடைத்தெருவில் பொறிகடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் பொருட்கள் வாங்க மக்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது.

Related Tags :
Next Story