பிரதமர் உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் கொரோனா தடுப்பு மருந்து புனேயில் தான் கிடைக்கப்போகிறது சுப்ரியா சுலே பெருமிதம்
பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும், புனேயில் இருந்து தான் அவருக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்போகிறது என சுப்ரியா சுலே எம்.பி. கூறினார்.
மும்பை,
கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி. யுமான சுப்ரியா சுலே அந்த நேரத்தில் பட்டதாரிகள் தொகுதி தேர்தல் நடைபெற உள்ள புனே தாலேகாவ் தாபடேவில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பிரதமா் மோடி உலகம் முழுவதும் சுற்றிவந்தாலும், கொரோனாவுக்கான மருந்து அவருக்கு புனேயில் இருந்து தான் கிடைக்க போகிறது என பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது.
அவர் (பிரதமர் மோடி) இன்று புனேயில் உள்ளார். பாருங்கள் அவர் உலகத்தில் உள்ள எல்லா இடங்களையும் சுற்றிவந்த பிறகும், புனேயில் தான் அவருக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க போகிறது. புனேயை தாண்டி எதுவும் இல்லை.
கொரோனா தடுப்பு மருந்தை புனேயை சேர்ந்தவர் தான் கண்டுபிடித்தார். ஆனால் யாரோ ஒருவர் அதை கண்டுபிடித்ததாக கூறுவார். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story