கார்த்திகை தீபதிருநாளையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூரில் கார்த்திகை தீபதிருநாளையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர்,
கார்த்திகை தீப திருநாள் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. கோவில், வீடுகளில் தீபங்களை ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.
தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபதிருநாள் நேற்று கோலாகலமாக கொண்டப்பட்டது. இதில் திருவாரூரில் வீடுகளில் அகல் தீபங்கள் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். வெள்ளம் கலந்த அவல் பொறியை இறைவனுக்கு படைத்தனர். வீட்டு வாசல்களில் வண்ண கோலங்கள் போட்டு பூக்களை பரப்பி குத்து விளக்குகளை வைத்து, அதனை சுற்றி அகல் விளக்குகளை பரப்பி தீபம் ஏற்றினர். இதனால் எல்லா திசைகளிலும் தீப ஒளியாக மின்னியது.
சொக்கப்பனை
கார்த்திகை திருநாளையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், குமர கோவில், பழனியாண்டவர் கோவில், திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கோவில் வாசலில் பனை மட்டை அடுக்கி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நன்னிலம்
இதேபோல நன்னிலம் சுறக்குடி அய்யனார் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூங்கில் குடியில் காமாட்சி அம்மன் கோவில், கைலாசநாதர் வரதராஜ பெருமாள் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story