படவேட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா


படவேட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
x
தினத்தந்தி 30 Nov 2020 6:56 PM GMT (Updated: 30 Nov 2020 6:56 PM GMT)

கண்ணமங்கலம் அருகே படவேட்டில் பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளாராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படவேடு பகுதிகளில் நிவர் புயல் காரணமாக சேதமான வாழை மரங்களை பார்வையிட்டு, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்தார்.

மேலும் அமிர்தி ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பில் உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, போளூர் தாசில்தார் சாப்ஜான், நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story