ஆட்டுபாக்கம் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை
அரக்கோணம் அருகே ஆட்டுபாக்கம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனையும், நிரந்தர மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சு.ரவி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து ரூ.40 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அரக்கோணம் ஒன்றியதிற்குட்பட்ட வெங்கடேசபுரம் டிபன்ஸ் காலனி பகுதியில் ரூ.48 லட்சத்தில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அப்போது நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் சீனிவாசன், நரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story