சென்னையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது + "||" + in Chennai In the case of the rape of the little girl One more person was arrested
சென்னையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத் கார வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்,
சென்னையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன்குமார், அவருடைய தாய், சகோதரி உள்பட 10 பேரை முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய விபசார தரகர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் என பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, முத்துபாண்டி உள்பட 8 பேரும், மேலும் 2 பேர் என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கிலி தொடர்போல் மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த வினோபாஜி (வயது 38) என்ற மேலும் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
இவர், அந்த சிறுமியை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், போலீஸ் துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் தரகராக செயல்பட்டு 15 வயது சிறுமியை விருந்தாக்கியதாக கூறப்படுகிறது.
கைதான வினோபாஜி, பழைய கோணி வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவர், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் பகுதிநேர நிருபராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. கைதான வினோபாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
2015-ம் ஆண்டு வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சென்னையில் தேவையான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’களை பரிசோதிக்க தானியங்கி கதவுகளில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.