டி.வி. நடிகை கற்பழிப்பு: காஸ்டிங் இயக்குனர் மீது வழக்குப்பதிவு


டி.வி. நடிகை கற்பழிப்பு:  காஸ்டிங் இயக்குனர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2020 5:36 AM IST (Updated: 1 Dec 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. நடிகையை கற்பழித்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை, 

மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், அவர் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

இதேபோல அவர் டி.வி. நடிகைக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகார் குறித்து போலீசார் காஸ்டிங் இயக்குனர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு குறித்து போலீசார் விரைவில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரியிடம் விசாரணை நடத்துவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆயுஷ் திவாரி மீது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story