பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் குப்பைக்கிடங்காக மாறிய சமுதாயக்கூடம்
பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் குப்பைக்கிடங்காக மாறி உள்ளது. இதனால் தங்கள் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ளது பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சி பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி, வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரம், தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம், கல்லாத்துகோம்பை ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்த பேரூராட்சியாகும்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பாலகிருஷ்ணம்பட்டியில் திருமண வைபவங்கள் நடத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள 2007-ம் ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
குப்பைக்கிடங்காக மாறியது
இந்த சமுதாய கூடம் திறக்கப்பட்டு ஆரம்பத்தில் சில மாதங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் அது பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டது. தற்போது, இந்த சமுதாயக்கூடம், பேரூராட்சியின் நிர்வாக திறன் இன்மையால் சீரழிந்து கேட்பாரற்று, பாழடைந்து, குப்பை கிடங்காக மாறி உள்ளதாகவும், இதனால் தாங்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பேரூராட்சி பகுதியில் தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம் போன்றவை சரிவர நடப்பதில்லை என்றும், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெறுவது, வீட்டுவரி ரசீது வழங்குவது போன்ற பணிகளில் காலதாமதம் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் மீது இப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள். எனவே சமுதாய கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை காலம் தாழ்த்தாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story