திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா திரளான பக்தர்கள் தரிசனம்
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல்,
குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டிலேயே சிறந்த தேவாரப்பாடல் பெற்ற தலம் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 3-வது கார்த்திகை சோமவாரவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து சுதர்சன ஹோமம் நடந்தது.
108 சங்காபிஷேகம்
பின்னர் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜை செய்து சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் செய்து இருந்தார்.
இதேபோல் குடவாசல் கோணேஸ்வரர் கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், கூந்தலூர் ஜம்புகேஸ்வரர் கோவில், சேங்காலிபுரம் துந்துபி ஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசலில் உள்ள குபேரசாய்பாபா மற்றும் சத்ரு சம்கார மூர்த்தி கோவிலில் சுதர்சனயாகம், கார்த்திகை தீபம் அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பனை ஓலைகளில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருமக்கோட்டை
கார்த்திகை சோம வாரவிழாவையொட்டி திருமக்கோட்டை வடக்குத்தெருவில் உள்ள வீரனார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story