மத்திய அரசை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 2:29 AM GMT (Updated: 1 Dec 2020 2:29 AM GMT)

மத்திய அரசை கண்டித்து கீழ்வேளூர் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் கிராமத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமதாஸ், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், நாகை ஒன்றிய செயலாளர் சண்முகம், நாகை மாவட்ட இணை செயலாளர் மீனம்ப நல்லூர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் செந்தில்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சுமூக தீர்வு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் மத்திய அரசை கண்டிப்பது, விவசாயிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story