மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் 16 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் 16 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2020 4:55 AM GMT (Updated: 1 Dec 2020 4:55 AM GMT)

டெல்லியில் உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்தும் சேலத்தில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்தும் சேலத்தில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணை போகாமல் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story