கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக நர்சுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி பங்களாமேட்டில், கொரோனா பெருந்தொற்று அவசர கால செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட தற்காலிக நர்சுகள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக நர்சுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்குமார், சுந்தரபாண்டி மற்றும் தற்காலிக நர்சுகள் பலர் கலந்துகொண்டனர். தங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும், மீண்டும் பணி வழங்கி தங்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story