சப்-கலெக்டரை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சப்-கலெக்டரை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 11:51 AM IST (Updated: 1 Dec 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது. அப்போது அங்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களை சப்-கலெக்டர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக தாலுகா அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் அங்கு விரைந்து வந்து பா.ஜனதாவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story