புதுச்சேரியில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று புதுச்சேரியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது. மருத்துவமனைகளில் 145 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 294 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரியில் இன்று 72 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 970 (97.16 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story