நெல்லையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 14 பேர் பாதிப்பு
நெல்லையில் நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடியில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 11 பேர், அம்பையில் 2 பேர், மானூரில் 2 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 5 பேர், பாப்பாக்குடியில் 2 பேர், வள்ளியூரில் 2 பேர், களக்காட்டில் 2 பேர், சேரன்மாதேவியில் 2 பேர் அடங்குவார்கள். நேற்று ஒரே நாளில் 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 14,855-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14,505 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 140 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 210 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7,833 பேர் வீடு திரும்பி உள்ளனர். 94 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,688-ஆக உள்ளது. இதில் 15,431 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 121 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 136 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story