வலங்கைமான் அருகே சேதம் அடைந்த நிலையில் மின்கம்பங்கள்; தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்; அச்சத்தில் கிராம மக்கள்


சேதம் அடைந்துள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரையும், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதையும் படத்தில் காணலாம்.
x
சேதம் அடைந்துள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரையும், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதையும் படத்தில் காணலாம்.
தினத்தந்தி 2 Dec 2020 1:59 AM IST (Updated: 2 Dec 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே சேதம் அடைந்த நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. மின் கம்பிகளும் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டிரான்ஸ்பார்மர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புளியக்குடி ஊராட்சி அமிர்தவல்லி கிராமம் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்துக்கு செல்லும் வழியில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களின் தேவைக்காக மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

வலங்கைமான் துணைமின் நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரத்தை மருவத்தூர் பகுதியில் இருந்து பெற்று அமிர்தவல்லி, புளியக்குடி, பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிப்பதற்கான டிரான்ஸ்பார்மர் அமிர்தவல்லி கிராமத்தின் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அச்சத்தில் கிராம மக்கள்
இதன் அருகே உள்ள 2 மின்கம்பங்கள் தற்போது மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. டிரான்ஸ்பார்மரும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மின் கம்பிகளும் தாழ்வாகவே செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் டிரான்ஸ்பார் மற்றும் அதன் அருகே உள்ள மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது பெய்து வரும் வடகிழக்குப்பருவமழை காரணமாக பலமான காற்று வீசினாலும், மண் அரிப்பு ஏற்பட்டாலும் இந்த மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மரும் சாய்ந்து விழுந்து அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த பகுதி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story