நிவர் புயலில் சாய்ந்த 194 ஆண்டு பழமைவாய்ந்த மரத்தை நட முயற்சி


நிவர் புயலில் சாய்ந்த 194 ஆண்டு பழமைவாய்ந்த மரத்தை நட முயற்சி
x
தினத்தந்தி 2 Dec 2020 3:30 AM IST (Updated: 2 Dec 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவை தாவரவியல் பூங்காவில் நிவர் புயலில் சாய்ந்த 194 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தை நட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

நிவர் புயல் கடந்த 26-ந்தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது புதுவையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதை தாக்குப்பிடிக்க முடியாமல் நகர பகுதியில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. பழமை வாய்ந்த புதுவை தாவரவியல் பூங்காவிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அவ்வாறு விழுந்த மரங்களில் தாவரவியல் பூங்காவில் இருந்த மகிழம்பூ மரமும் ஒன்றாகும். இந்த மரம் 194 வயதுடையதாகும். கடந்த 2010-ம் ஆண்டு வீசிய தானே புயலுக்கு இந்த மரம் தாக்குப்பிடித்து இருந்தது. ஆனால் இந்த நிவர் புயலுக்கு மரம் வேரோடு சாய்ந்தது.

இந்த மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேளாண்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக வேளாண் இயக்குனர் பாலகாந்தி தலைமையில் அதிகாரிகள் அங்கு நேற்று ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி ஊழியர்கள் அங்கு வந்து சாய்ந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினார்கள். அதன்பின் ராட்சத கிரேன் மூலம் மரத்தை தூக்கி நட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த மரத்தை இன்று (புதன் கிழமை) மீண்டும் நட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story