அரவக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரவக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 7:52 AM IST (Updated: 2 Dec 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story