கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் படத்தை வைக்கக்கோரி அரசு ஜீப் கண்ணாடியை உடைத்தும், வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தும் தகராறில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணைச்செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் செல்வபோதகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பார்வதி, மாவட்ட ஊர்தி ஓட்டுனர் சங்க செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தணிக்கையாளர்கள் குமார், செல்வராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை, வட்டார நிர்வாகிகள் ஜெயசுதா, ஹசினா, மணிமேகலை மாரியப்பிள்ளை, அபர்ணா, பூபதி, மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் வீரபுத்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story