குளச்சலில் சுனாமியில் உடைந்தது 16 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத புயல் எச்சரிக்கை கூண்டு
குளச்சலில் சுனாமி நேரத்தில் உடைந்த புயல் எச்சரிக்கை கூண்டு 16 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளச்சல்,
குளச்சல் துறைமுகத்தில் கப்பல்கள் இயக்கப்பட்ட காலக்கட்டத்தில் ‘சிக்னல்‘ காட்டுவதற்காக துறைமுக அலுவலக கோபுரத்தில் மண்எண்ணை விளக்கு ஏற்றப்பட்டது. மேலும் புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் கப்பல்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுவதற்கு கூண்டு கம்பமும் அமைக்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் குளச்சல் துறைமுக அலுவலகத்தில் உள்ள புயல் எச்சரிக்கை கூண்டு கம்பம் மற்றும் மண்எண்ணை விளக்கு கூண்டு சேதமடைந்தது. தற்போது விளக்கு கூண்டு கோபுரம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 16 ஆண்டுகளாக இந்த கம்பம் மற்றும் எச்சரிக்கை கூண்டு சீரமைக்கப்படவில்லை.
சீரமைக்க வேண்டும்
தற்போது மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் காற்றின் வேகம், தன்மையை அறிந்து கொள்ள கூண்டு இல்லை. எனவே எச்சரிக்கை கூண்டு ஏற்றுவதற்கு வசதியாக மீண்டும் கூண்டு கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story