தென்காசியில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்; கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் பங்கேற்பு


தென்காசியில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில்
x
தென்காசியில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில்
தினத்தந்தி 3 Dec 2020 4:29 AM IST (Updated: 3 Dec 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்
வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு புயல் வெள்ள பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், திட்ட அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் தயார்
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கன மழை பெய்தால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக அதனை சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், “தென்காசி மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Next Story