வி.கைகாட்டியில் ஏர்கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் கைகாட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வி.கைகாட்டி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் கைகாட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தெற்கு வட்டார தலைவர் சுண்டக்குடிதியாகராஜன், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், இந்திய விவசாய அமைப்புகளின் மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் ஏர்கலப்பை ஏந்தி வைத்து இருந்தனர்.

Related Tags :
Next Story