விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம்


விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 8:17 AM IST (Updated: 3 Dec 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால்,

விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வேளாண் சட்டங் களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமீம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

44 பேர் கைது

மறியல் போராட்டத்தில் விவசாயிகளுக்கான மின்சாரத்தை தனியாருக்கு விற்கக் கூடாது. டெல்லில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story