வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காளைமாடுகளுடன் ஏர்கலப்பை யாத்திரை போராட்டம்
மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் ஏர்கலப்பை யாத்திரை போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்றோர் ஏர்கலப்பையில் இரு காளைமாடுகளை பூட்டி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்துக் கோஷம் எழுப்பினர். போராட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட மகளிரணி தலைவர் தேவகிராணி, மாவட்ட துணைத் தலைவர் துரைமுருகேசன், நிர்வாகிகள் கோதண்டன், வெங்கடேசன், குபேந்திரன், நயீம்பர்வேஸ், கோவிந்தராஜ், பாக்கம் ரவி, விஜயேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் எம்.வீராங்கன் வரவேற்றார்.
போராட்டத்தை பேரணாம்பட்டு நகர தலைவர் ஜி.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசை கண்டித்துக் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஏர்கலப்பை யாத்திரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story