புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை


புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
x

புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் புதுச்சேரியில் ஏற்கனவே நிவர் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது புரெவி புயலால் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புரெவி புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story