குளித்தலை அரசு கல்லூரி திறப்பு: முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின


குளித்தலை அரசு கல்லூரி திறப்பு: முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின
x
தினத்தந்தி 4 Dec 2020 12:22 AM GMT (Updated: 4 Dec 2020 12:22 AM GMT)

குளித்தலை அரசு கல்லூரி திறக்கப்பட்டு முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

குளித்தலை,

கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனரகம் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் முதல் வரத்தொடங்கினர். இதையடுத்து குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் 7 முதுகலை பாடப்பிரிவுகளும், 5-க்கும் மேற்பட்ட இளநிலை ஆராய்ச்சி மற்றும் முதுநிலை ஆராய்ச்சி பாடப்பிரிவுகளின் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

உடல்வெப்ப நிலை

கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில், கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, அனைவருக்கும் கிருமிநாசினி அளித்தும், ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story