திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய கலெக்டர்


திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய கலெக்டர்
x
தினத்தந்தி 4 Dec 2020 10:10 AM IST (Updated: 4 Dec 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள், மனநல காப்பகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், உடல் உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகிறது. தற்போது நகர முடியாத மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வருவாய்த்துறை இணைந்து உதவிகளை வழங்கி வருகிறது. தகுதியானவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் வந்தனா கார்க், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் அப்துல் முனிர், தாசில்தார் மோகன், உதவும் உள்ளங்கள் நிறுவனர் ரமேஷ், ஒர்க் டிரஸ்ட் நிறுவன மேலாளர் மகேஷ், ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story