நெமிலி தாலுகா அலுவலகத்தில் கொரோனா 2-வது அலை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
நெமிலி தாலுகா அலுவலகத்தில் கொரோனா 2-வது அலை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தற்போது கொரோனாவால் பொதுமக்கள் அச்சமின்றி, முகக் கவசம் அனியாமலும், சமூக விலகலை பின்பற்றாமலும் இருந்து வருகின்றனர். எனினும், கொரோனா பாதிப்பு முற்றிலுமாக முடியவில்லை. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா 2-வது அலையில் இருந்து பொதுமக்களை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முகக் கவசம் அணியாமல் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு எந்தப் பொருளும் வழங்க வேண்டாம், என வியாபாரிகளிடம் பேரூராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் குமார், புன்னை அரசு மருத்துவமனை டாக்டர் பாவனா, நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், பனப்பாக்கம் பேரூராட்சியின் சார்பாக சொக்கலிங்கம், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வணிகர் சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story