புயல் முன்னெச்சரிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


புயல் முன்னெச்சரிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2020 6:19 AM GMT (Updated: 4 Dec 2020 6:19 AM GMT)

குமரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார். அவர் கன்னியாகுமரி, சின்னமுட்டம், மணக்குடி மற்றும் கடற்கரை கிராம பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பார்வையிட்ட போது அங்குள்ள மீனவர்களிடம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

போலீசாருக்கு அறிவுரை

மேலும், போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் புயல் நேரங்களில் பாதுகாப்பாக சிறப்பான முறையில் பணி செய்யும் படியும் அறிவுரை கூறினார். கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடமும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story