மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைவதுமாக இருந்து வருகிறது.இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை யொட்டி நேற்று காலையில் இருந்து அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது.அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று விநாயகர் மற்றும் சப்தகன்னிமார் கோவிலை சூழ்ந்த வாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர்.
மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story