புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் நாராயணசாமி ஆய்வு

புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் நாராயணசாமி ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2020 3:10 PM IST (Updated: 4 Dec 2020 3:10 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் நாராயணசாமி இன்று காலை ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் நாராயணசாமி இன்று காலை ஆய்வு செய்தார்.

கடந்த இரண்டு  தினங்களாக  புதுவை மாநிலம் முழுவதும் தொடர் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் முதல்வர் நாராயணசாமி  இன்று  காலை நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார்.

அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாக மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டார்.

Next Story