புரெவி புயல் எதிரொலி: நாமக்கல்லில் இடைவிடாது பெய்த சாரல்மழை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புரெவி புயல் எதிரொலியாக நேற்று நாமக்கல்லில் இடைவிடாது பெய்த சாரல்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாமக்கல்,
வங்க கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி சாரல்மழை பெய்து வருகிறது.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதை பார்க்க முடிந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஒட்டி செல்வதை பார்க்க முடிந்தது. பொதுமக்கள் குடைபிடித்தவாறு செல்வதையும் காண முடிந்தது. சூரியஒளி தெரியாத அளவுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை இருந்தது.
எனவே பெரும்பாலான பொதுமக்கள் சாரல்மழையால் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
நாமக்கல்-10, மங்களபுரம்-6, கொல்லிமலை-6, எருமப்பட்டி-5, மோகனூர்-5, குமாரபாளையம்-3, பரமத்திவேலூர்-2, புதுச்சத்திரம்-2, சேந்தமங்கலம்-2, திருச்செங்கோடு-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 43 மி.மீட்டர் ஆகும்.
இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story