மருதை ஆற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்தது


மருதை ஆற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 5 Dec 2020 6:30 PM IST (Updated: 5 Dec 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

மருதை ஆற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்தது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சமலையில் மழை பெய்வதால் கல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் தொடர் மழையால் மருதையாற்றிலும் தண்ணீர் செல்கிறது. மேலும் மருதையாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவியில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது.

இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள பருத்தி, மக்காச்சோள பயிர்கள், ஊடு பயிரான மிளகாய், எலுமிச்சை பயிர்கள் போன்றவற்றை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் மற்ற இடங்களிலும் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தெற்கு மாதவி கிராமத்திற்குள் மருதையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. எனவே மருதையாற்று தண்ணீர் விளைநிலங்களுக்கும், கிராமத்திற்குள்ளும் வராமல் இருக்க, மருதையாற்றை தூர்வார வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story