திருவண்ணாமலை மாவட்டத்தில், 6 இடங்களில் ரூ.94 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் ரூ.94 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிர்ப்பு மையங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சு.பாப்பம்பாடி கிராம ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியம் மூலமாக கிராமப்புற பால் கொள்முதல் திட்டம் பகுதி-3 கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பாரி பாபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இதேபோல் கொளக்குடி, மேல்கச்சிராப்பட்டு, நாச்சானந்தல், மலையனூர், செக்கடி, அய்யனார் கோவில் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களுக்கான கல்வெட்டுகளையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை சார்ந்த 548 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்து 248 உறுப்பினர்களிடம் இருந்து சராசரியாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 408 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் பால் மாவட்டத்தில் உள்ள 39 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலமாகவும், 2 பால் குளிரூட்டும் நிலையங்கள் மூலமாகவும் குளிர்விக்கப் பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 8 ஆயிரத்து 600 லிட்டர் பால் உள்ளூர் விற்பனை செய்யப்படுகிறது.
சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் உள்ளூர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தி யாளர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை பால் பணம் பட்டுவாடா செய்யப் பட்டு உள்ளது. மேலும் மாதந்தோறும் 350 டன் கால்நடை தீவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தாது உப்பு கலவை கொள்முதல் செய்யப்பட்டு பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மாதந்தோறும் 10 டன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தி யாளர்களுக்கு கூட்டுறவு கடனுதவி அளிக்கப் படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர் (பால்வளம்) மு.விஸ்வேஸ்வரன், பொது மேலாளர் ஏ.இளங்கோவன், துணை பொது மேலாளர் எம்.நாச்சியப்பன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.ஜானகிராமன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர்.வடிவேல், ஜி.விஜயலட்சுமி, ஜி.குணசேகரன், கே.ஜெனார்த் தனன், டி.மணிலா, கே.சசி, செயலாளர்கள் ஆர்.விஜய ராஜ், ஆர்.பிரசாத், கே.பாண்டியன், ஜி.முனியன், பி.கோவிந்தராஜி, டி.பச்சி யப்பன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story