சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமி பலாத்காரம்
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் வேல்பாண்டி (வயது 34). தொழிலாளி. இவரது உறவினர் வீடு நெல்லை மேலப்பாளையத்தில் உள்ளது.
அங்கு வேல்பாண்டி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை வேல்பாண்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து உறவினர்கள் அவரிடம் கேட்டபோது மிரட்டினார். இதுதொடர்பாக உறவினர்கள் சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்பாண்டியை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து, வேல்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெப ஜீவராஜா ஆஜரானார்.
Related Tags :
Next Story