புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:53 AM IST (Updated: 6 Dec 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,250 பேர் மீது வழக்கு.

மலைக்கோட்டை,

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவ சாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க.வினர் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத் துக்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளா் காடுவெட்டி தியாகராஜன், சவுந்திர பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள், தொண் டா்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க.வினர் சிலர் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர். இந்தநிலையில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,250 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story