திருவாரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில் மறியல் முத்தரசன் உள்பட 85 பேர் கைது
திருவாரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட்ட முத்தரசன் உள்பட 85 பேரை கைது செய்தனர்.
திருவாரூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரித்து, தினக்கூலியை உயர்த்த வேண்டும். ஏழை, எளிய குடும்பங்கள் அனைவருக்கும் கொரோனா கால நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்தது.
அதன்படி நேற்று திருவாரூரில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தரசன் கைது
போராட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் நாகை செல்வராசு எம்.பி., முன்னாள் எம்.பி. பெரியசாமி, மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரெயில் மறியலில் ஈடுபட்ட முத்தரசன் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக ரெயில் திருவாரூரில் இருந்து 15 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
ரெயில் மறியலுக்கு பின்னர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டங்கள் தொடரும்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் இல்லாமல் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள், அரசு அலுவலக முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை இந்த போராட்டங்கள் தொடரும். தான் ஒரு விவசாயி என கூறி வரும் தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் போக்கை கைவிட்டு, இந்த சட்டங்களுக்கு எதிராக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலை மறியல்
அதேபோல் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய 2 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 25 இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட 556 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story