நாகர்கோவிலில் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி


நாகர்கோவிலில் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2020 11:33 AM IST (Updated: 6 Dec 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நாகர்கோவிலில் அவரது உருவப்படத்துக்கு, மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவில்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. அதேபோல் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா அருகில் நேற்று நடந்தது. ஜெயலலிதாவின் உருவப்படம் பெரிய அளவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு திரண்டிருந்த அனைவரும் அசோகன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் திலக், தலைமை செயற்குழு உறுப்பினர் டாரதி சாம்சன், மாநகர செயலாளர் சந்துரு, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், நிர்வாகிகள் சதாசிவம், சுகுமாரன், சுந்தரம், கண்ணன், பொன்.சுந்தர்நாத், ஜெயசீலன், ஜெசீம், சகாயராஜ், மாதவன், தென்கரை மகாராஜன், விக்ரமன், சந்திரன், பொன்சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகை வளாகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

நகர அ.தி.மு.க. செயலாளர் வின்ஸ்டன் கலந்து கொண்டு உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பீட்டர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் மதுசூதனன், 9-வது வார்டு கிளை செயலாளர் மார்சிலின், கன்னியாகுமரி நகர அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூலோக ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொட்டாரம்

கொட்டாரத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அகல்விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கொட்டாரம் நகர அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் பாலமுருகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலன், கணபதி, வைத்தியநாதன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், பிரபாகரன், அண்ணா ஆட்டோ ஓட்டுனர் சங்க முன்னாள் செயலாளர் பாலசிங், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டாரத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் பி.சி.அன்பழகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கன்னியாகுமரி பாலசுப்ரமணியபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டர் பவ்வர் முதியோர் இல்லத்தில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ். ஏ. அசோகன் தலை மை தாங்கி முதியவர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

அஞ்சுகிராமம் பஸ்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன், பேரூராட்சி முன்னாள் தலைவி ஜெயந்தி நாராயணன், பேரூர் பேரவைச் செயலாளர் மணிகண்டன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரம்பிள்ளை, அருள்செல்வி, அனிதா, ராசய்யா, தளவாய், பரமசிவம், ஜோசப் ராஜ், ராமச்சந்திரன், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோவாளை

ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு பேரூர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் மாடசுவாமி தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் முத்துசாமி, துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரவைச் செயலாளர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்க, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகிக்க ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், 108 அகல் விளக்கு ஏற்றியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், யூனியன் கவுன்சிலர் அய்யப்பன், ஒன்றிய துணை செயலாளர் ரோகிணி அய்யப்பன், இணை செயலாளர் ரமணி, பொருளாளர் தென்கரை மகாராஜன், யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், துணைத் தலைவர் லாயம் ஷேக், ஒன்றிய பாசறை செயலாளர் சுதாகர், பிரதிநிதி கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நரசிங்க மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கே.சி.யு மணி, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், ஆரல் பேரூர் செயலாளர் மாட சுவாமி, தோவாளை ஊராட்சி முன்னாள் செயலாளர் நாகராஜன், பீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாழக்குடி பேரூர் அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம், பார்வதி புதூர், சீதப்பால், விளாங்காட்டு காலனி ஆகிய இடங்களில் ஜெயலலிதா உருவ படத்துக்கு தாழக்குடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் அய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயன், மகளிர் அணி துணைச் செயலாளர் முருகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் ஜேம்ஸ், கார்த்திக், சுகுமாரன் சிவராமகிருஷ்ணன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ஈசாந்தி மங்கலம்

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் ஜங்ஷனில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தோவாளை ஒன்றிய பேரவை செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிளை செயலாளர் நா கரு பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தோவாளை ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆரல்வாய்மொழியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தோவாளை கிழக்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மணி, அவைத்தலைவர் தங்கப்பன், அம்மா பேரவை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story